பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

105 கிய நூல்கள் இயற்றியுள்ளார். இலக்கியங்களின் வகைகள் எத்தனை-எத்தனையோ அத்தன்ை அத்தனை வகைகளி லும் கவிஞர் பல இலக்கிய நூல்கள் எழுதியுள்ளார். அவர் நூல்களின் பட்டியலை இங்கே தரவேண்டியதில்லை. ஆனால் ஒரு கருத்தை இங்கே சொல்ல விரும்பு கிறேன். முன்னோர் பாடியுள்ள பாடல்களின் இசை யமைப்பை-மெட்டை ஒட்டி அவர் சில பாடல்கள். இயற்றியுள்ளார். மாதிரிக்காக இங்கே ஒன்று தருகிறேன். 'வலியோர்சிலர் எளியோர்தமை வதையேபுரி குவதா மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா” என்னும் பாடலை எடுத்துக் கொள்வோம். இது, சுந்தர மூர்த்தி நாயனாரின் திருவெண்ணெய் நல்லூர்த் தேவாரப் பாடலாகிய 'பித்தாபிறை குடிபெரு மானேயரு ளாளா' என்னும் பாவைப் பின்பற்றியதாகும். இது, இந்தளம் என்னும் பண்ணில் பாடப்பட்டதாகும். மற்றும், கம்ப ராமாயணம்-அயோத்தியா காண்டம்-கங்கைப் படலத்தில் உள்ள வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியில் மறைய என்னும் பாடலின் அமைப்பும் இன்னதே. இந்தக்கருத்தைக் கவிஞரே என்னிடம் கூறியதாக நினைவிருக்கிறது. மேலும், திரையோவியப் (சினிமா) பாடலைப் பின் பற்றியும் கவிஞர் பாடலை அமைத்துள்ளார் என்பது ஒரு பாடலால் தெரிகிறது. தமிழ்த்தாய் வாழத்துப் பாடலாகப் புதுவை மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது