பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9 இது இப்படி இருக்க, புதுச்சேரி உப்பளம் பகுதியினர் 'பாரதியார் கழகம்’ என்னும் ஒரு நிறுவனம் தொடங்கினர். அதன் திறப்பு விழா, ஒரு நாள் காலையில் முத்து இராசாக் கண்ணனார் தலைமையில் நடை பெற்றது. ஆசிரியர் மு.த. வேலாயுதனார் காலைச் சொற்பொழி வாளர். மாலையில் பாரதிதாசன் தலைமையில் என்னைப் பேசச் செய்தார்கள். நீண்ட நாட்கட்குப் பிறகு அப்போது தான் யான் பாரதிதாசனைப் பார்க்கும் வாய்ப்பு பெற் றேன். யான் சொற்பொழிவாற்றி முடித்தேன். இறுதியாகப் பாரதிதாசன் நிறைவுரை யாற்றத் தொடங்கினார். இராசாக் கண்ணனாரைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். பெரிய புராணத்தில் வரும் இயற் பகை நாயனார் தம் மனைவியை அடியார்க்குக் கொடுத் ததாக வரலாறு, இராசாக்கண்ணு இயற்பகை நாயனார் பற்றிப் பேசினானே - இவன் தன் மனைவியை அடியார் என்ற பெயரில் யாராவது வந்து கேட்டால் தருவானா ? என்று கவிஞர் தாக்கிப் பேசினார். என்னையும் கிண்டல் செய்து தாக்கிப் பேசினார். யாராவது அளவு மீறிப் போனால், உடனே எழுந்து மறுத்துப் பேசுபவன் நான். என் பக்கத்தில் அமர்ந்திருந்த வேலாயுதனாரிடம், பாரதி தாசனை நான் எழுந்து மறுத்துப் பேசப்போகிறேன் என்று சொல்லித் துடித்தேன். வேலாயுதனார் என்னைத் தடுத்து அமைதி கொள்ளச் செய்தார். அப்போது சுத்தானந்த பாரதியார் புதுச்சேரி - அர விந்த ஆசிரமத்தில் நெடுநாளாகத் தங்கியிருந்தார். சுத்தா னந்தர் தம்மைக் கவியோகி சுத்தானந்த பாரதியார் என் னும் பெயரால் குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். பாரதி தாசன் அந்தப் பெயரைப் பிடித்துகொண்டார். சிலர் தங்கள் பெயருக்கு முன்னால் யோகி என்று போட்டுக்