பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

| 1 || 3. சஞ்சீவி பர்வதச் சாரல் - என்று சாற்றும் சுவடி திறந்து சஞ்சார வானிலும் எங்கள் - செவி தன்னிலும் நற்றமிழ் ஏற்றி அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க ஆசையி னால்ஒரு தோழர். செஞ்சுடர் அச்சம யத்தில் - எம்மைச் செய்ததுதான் மிக்க மோசம். ('சஞ்சீவி பர்வதச் சாரல்’ என்பது கவிஞர் இயற்றிய சிறு காப்பியம்) 4. மிக்க முரண்கொண்ட மாடு - த.ை மூக்குக் கயிற்றையும் மீறிப் பக்கம் இருந்திடும் சேற்றில் - ஒடிப் பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச் சக்கரம் போல்இருள் வானில் - முற்றும் சாய்ந்தது சூரிய வட்டம். புக்க பெருவெளி யெல்லாம் - இருள் போர்த்தது; போனது தோணி. 5. வெட்ட வெளியினில் நாங்கள் - எதிர் வேறொரு காட்சியும் கண்டோம். குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில் கூந்தல் சரிந்ததோர் ஈந்தும் மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப வார்த்தைகள் பேசிடும் போது கட்டுக் கடங்கா நகைப்பைப் - பனை கலகல என்று கொட் டிற்றே.