பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

114 வண்ணப் பூவும் மணமும்,போலே மகர யாழும் இசையும் போலே கண்ணும் ஒளியும் போலே எனது கன்னல் தமிழும் நானும் அல்லவோ வெண்ணிலாவும் வானும் போலே வையகமே உய்யுமாறு: வாய்த்த தமிழ் என் அரும்பேறு துய்யதான சங்கம் என்னும் தொட்டிலில் வளர்ந்த பிள்ளை (தம்) கையிலே வேலேந்தி-இந்தக் கடல் உலகாள் மூவேந்தர் கருத் தேந்திக் காத்தார்-அந்தக் கன்னல் தமிழும் நானும் நல்ல வெண்ணிலாவும் வானும் போலே 2. பெற்றோர் ஆவல் துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா-எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா?-நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா?-கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா? - வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வில் உணர்வு சேர்க்க-எம் வாழ்வில் உணர்வு சேர்க்க-நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா-கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா?