பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

115 அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே அறிகிலாத போது-யாம்.யாம் அறிகிலாத போது-தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா?-நீ இயம்பிக் காட்ட மாட்டாயா? புறமி தென்றும்நல் லகம்இ தென்றுமே - புலவர் கண்ட நூலின்-தமிழ்ப் புலவர் கண்ட நூலின்-நல் திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச் செல்வம் ஆக மாட்டாயா-தமிழ்ச் செல்வம் ஆக மாட்டாயா? 3. தந்தை பெண்ணுக்கு! தலைவாரிப் பூச்சூடி உன்னைப்பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை! சிலை போல ஏனங்கு நின்றாய்?-நீ சிந்தாத கண்ணிரை ஏன்சிந்து கின்றாய்! விலைபோட்டு வாங்கவா முடியும்.?கல்வி வேளைதோ றும்கற்று வருவதால் படியும்! மலைவாழை அல்லவோ கல்வி-நீ வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி! படியாத பெண்ணா யிருந்தால்-கேலி பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்! கடிகாரம் ஒடுமுன் ஒடு-என் கண்ணல்ல! அண்டை வீட்டுப் பெண்களோடு! கடிதாய் இருக்கும்.இப்போது-கல்வி கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது! கடல் சூழ்ந்த இத்தமிழ்நாடு-பெண் கல்வி பெண்கல்வி என்கின்ற தன்போடு!