பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

117 தமிழுக்கு மணமென்று பேர்-இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்-இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்-இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வாள்-இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்-இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்-இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! தமிழுக்கும் அமிழ்தென்று பேர்! மேலே காட்டப்பட்டுள்ள பாடல்கட்குப் பொருள் விளக்கம் தேவையில்லை, பாவேந்தரின் படைப்புகளைப் பற்றிப் பலர் பல கோணங்களில் ஆய்ந்து பல நூல்கள். எழுதியுள்ளனர். நான் இந்நூலில் அந்த முயற்சியில் இறங்க வில்லை. பல ஆண்டுகளாகப் பாவேந்தர் பாரதி தாசனா ரோடு நான் கொண்டிருந்த தொடர்பு பற்றியும் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில செய்திகள் பற்றியும் நான் மிக வும் சுவைத்த அவருடைய பாடல்கள் பற்றியும் இந் நூலில் ஒரு சிறிது எழுதியுள்ளேன். வாய்ப்பு நேருங்கால் பெரிய அளவில் பாவேந்தரின் நூல்களைப் பற்றி ஆய்வு செய்து பலருக்கும் அறிவிக்க இருக்கிறேன். பாவேந்தரின் புகழும் அதற்குக் காரண மான அவ. ருடைய படைப்புகளும் என்றும் நின்று நிலைத்து வாழ்க வாழ்க!