பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10 கொள்வர் - பின்னால் ஆனந்தர் என்னும் சொல்லையும் சேர்த்துக்கொள்வர் - மேலும் பெருமை கருதிப் பாரதி யார் என்றும் சொல்லிக் கொள்வர் - என்றெல்லாம் கூறிச் சுத்தானந்த பாரதியாரை 'வாரு வாரு’ என்று வாரினார். கூட்டம் முடிந்தபின், கையிழுப்பு வண்டிகள் (ரிக்ஷாக் கள்) காத்திருந்தன. ஒவ்வொரு வண்டியிலும் இருவர் அமரலாம். பாரதிதாசன் ஒரு வண்டியில் அமர்ந்து கொண்டு என்னை அழைத்து ஏறிக்கொள்ளுங்கள் என்று தம் பக்கத்து இடத்தைக் காட்டினார். சிறு வயதின னாகையால், கருத்து வேற்றுமையைப் பொருட்படுத்தா திருக்க முடியாதவனாய், அவர் பக்கத்தில் அமர மறுத்து வேறு வண்டியில் ஏறிக்கொண்டேன். நடந்தனவெல்லாம் நான் மறுநாள் இராசாக்கண்ண னாரிடம் அறிவித்தேன். அவர் வாய் பேசாது கண்ணை மூடிக் கொண்டு ஏதோ எண்ணத்தில் ஆழ்ந்து விட்டார். இராசாக் கண்ணனார் என்பவரை இரண்டாவது பாரதி தாசன் என்று கூறலாம். கவிஞரை விட இவர் மிகவும் கடுமையானவர்; முன் சீற்றக்காரர்; எவரையும் கடுமை யாகத் தாக்கிப் பேசி விடுவார்; முரடர், அஞ்சா நெஞ்சத் தினர். தமிழ்ப் பேராசிரியர் அனைவருக்கும் இது தெரியும். ஆனால், அப்பேர்ப்பட்ட இராசாக் கண்ணனாரே, அடுத்த நாள் பேச்சில் பாரதி தாசனுக்கு எந்த மறுப்பும் கூற வில்லை; பேசாது அடங்கிவிட்டார். இது பெரிய வியப்பு! பாரதி தாசனைவிடக் கடுமையான தோற்றமும் வன்மை யான வெடிக் குரலும் உடைய இராசாக் கண்ணனாரே பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டாரென்றால், வியப் படையாமல் என்ன செய்வது! அந்த அளவுக்குப் பாரதி தாசனுக்கு ஒட்டம் ஒடியது.