பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

11 இனப்பற்று இன்மை: பாரதிதாசனும் இராசாக் கண்ணனாரும் யானும் (சுந்தர சண்முகம்) ஒரே இனத்தவர்-செங்குந்த முதலியார் மரபினர் - அப்படி இப்படி தொட்டுப் பார்த்தால் தூரத்து உறவும் இருக்கும். இது பாரதிதாசனுக்கு நன்றா கத் தெரியும், அப்படியிருந்தும், இனப்பற்று காரண மாகவோ உறவுகாரணமாகவோ எந்தப்பற்று பாசமும் இரக்கமும் காட்டாமல், சொற்பொழிவில் கொல்லு -கொல்லு என்று எங்களைக் கொன்று விட்டார். இராசாக் கண்ணனார் எப்படி யானாரோ! ஆனால் யான்மட்டும் அன்று தொடங்கிப் பாரதிதாசன்மேல் பகை யுணர்வு கொண்டுவிட்டேன். இதன் பின் விளைவு ஒன்றை இங்கே சொல்ல விரும்புகிறேன்: காரிருளில் மின்னல்: 1942 - கோடை விடுமுறையில் பாரதி தாசனோடு இந்தப் பிணக்கு ஏற்பட்டது. விடுமுறை முடிந்ததும் மயி லம் தமிழ்க் கல்லூரிக்குப் பணியாற்றச் சென்றேன். காலையில் கல்லூரியில் வகுப்பு தொடங்குவற்கு முன்பு, ஆசிரியர்களும் மாணாக்கர்களும் ஒரிடத்தில் வரிசையாக நின்று கூட்டுக் குழு வழி பாட்டுப் பாடல்கள் பாடிய பின்னரே வகுப்புக்குச் செல்வது வழக்கம். (Յ(Լք வழிபாட்டில் முதலில் கடவுள் வணக்கப்பாடலும் அடுத்துத் தமிழ் வாழ்த்துப் பாடலும் பாடப்பெறும். நாடோறும் ஒரே பாடல் இன்றி வேறு வேறுபாடல் பாடப் படும். தமிழ் வாழ்த்தாகச் சுப்பிரமணிய பாரதியார் பாடல்கள், சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியப் பாடல்