பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13 ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே வீரரின் வீரமும் வெற்றியும் நீயே தாழ்ந்திடும் நிலையினில் உனைவிடுப் பேனோ தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீ; உயிர் நான் மறப்பேனோ செந்தமிழே உயிரே நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித் தேனே நைந்தாயெனில் நைந்து போகும் என் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே முந்தைய நாளினில் அறிவும் இலாது மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது செந்தாமரைக் காடு பூத்தது போலே செழித்த என் தமிழே ஒளியே வாழி!” இந்தப் பாடலைக் கேட்ட பின்னர், பாவேந்தர் மீது எனக்கிருந்த பகையுணர்வு சிறிது சிறிதாகக் குறைந்து பின்னர் அறவே மறைந்தது. அவர்பால் எனக்கு ஒரு வகைப் பற்று ஏற்பட்டது. கார் இருளில் மின்னல் போலப் பகைமையிடையே இந்தப் பற்று ஏற்பட்டது. ஆனால், மின்னல்போல் மறைந்து விடாமல் இன்றுவரையும் நீடித்து நிலைத்திருக்கின்றது. பகைவனை மயக்கிப் பகை மாற்றிய சிறப்புப் பாடலாகும் இது. 1943 என எண்ணுகிறேன் - ஆண்டுக் கணக்கு தவறா யிறுப்பின் பொறுத்தருள வேண்டும் - புதுச்சேரியில்