பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14 திராவிடர் கழக மாநாடு நடந்தது. பெரியார், அண்ணா முதலிய பெருந்தலைவர்கள் எல்லாரும் வந்திருந்தனர். பாவேந்தர் பாரதிதாசனார் முன்னின்று நடத்தினார். மாற்றுக் கட்சியினர் கூட்டம் நடக்கவிடாமல் கலகம் செய்தனர். பாவேந்தர் கடுமையாகத் தாக்கப்பட்டார். இது மறுநாள் செய்தித் தாளில் வெளியிடப்பட்டிருந்தது. அப்போது நான் மயிலத்தில் இருந்தேன். நானும் சிலரும் கல்லூரித் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒருவர், பாரதிதாசன் தாக்கப்பட்ட செய்தியைப் படித் தார். நான், ஐயையோ - பாவம் - அநியாயம் - என் றேன். அப்போது மற்றொரு ஆத்திகர், ‘என்ன பாவம் - அவனுக்கு அது வேண்டியதுதான் - என்று மகிழ்ச்சி தெரி வித்தார். அவரது மகிழ்ச்சிக் கூற்று, எனக்கு, வெந்த புண் னில் எறிந்த வேல் ஆயிற்று. 1942ஆம் ஆண்டு நிகழ்ந்த பகைச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின்னர் 1944 ஆம் ஆண்டு கோடை விடு முறையில்தான் பாவேந்தரை நேரில் கண்டேன். அந்த விடுமுறைக் காலத்தில் புதுக்சேரியில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. புதுச்சேரி வைசியர் தெருவில் உள்ள ஆரிய வைசிய சமாசத்திற்குப் பக்கத்தில் இருப்பதும் நான் இருபத்தைந்தாண்டு காலம் குடியிருந்ததும் 61-c என்னும் எண் உடையதுமாகிய இல்லத்தில்தான் என் திருமணம் நடைபெற்றது. என் திருமண நாளுக்கு முதல்நாள் மாலை, பக்கத்துக் கட்டடமாகிய ஆரிய வைசிய சமாசத்தில் ஒரு கூட்டம் நடந்தது, புதுச்சேரிப் பெரும் புலவர் துரைசாமி முதலி யார் காலமானது தொடர்பாக நடைபெற்ற இரங்கல் கூட்டம் அது. பாவேந்தரின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டம் வியப்பிற்கு உரியது. துரைசாமி முதலியாரும்