பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20 றொரு செய்தியையும் உடன் சொல்லலாம் என்னும் கருத்துடைய ஒன்றினம் முடித்தல்-தன் இனம் முடித் தல்-என்னும் இலக்கண உத்தியின்படி, நாட்டுப் பற் றோடும் பிரெஞ்சுக்காரரின் பெருந்தன்மையோடும் தொடர்புடைய மற்றொரு செய்தியையும் இவண் சொல்ல விரும்புகிறேன்: 1954 ஆம் ஆண்டு புதுச்சேரியில் விடுதலைப்போராட் டம் மிடுக்காக நடந்தது. பல கட்சியினர் விடுதலைக்காகப் பாடுபட்டனர். திரு துரை முனிசாமியவர்களின் தலைமை யில் இயங்கிய இளைஞர் காங்கிரஸ் நிறுவனம், புதுச்சேரி காளத்தீசுவரன் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத் தில் இருந்தபடி செயல்பட்டது. பிரெஞ்சு ஆட்சி இயக்கத் தினர் புதுச்சேரிப் பொறுக்கிக் கூட்டத்தை விட்டுவிடுதலை இயக்கத்தினர்க்குத் தொல்லை தந்து வந்தனர். ஒரு நாள் இளைஞர் காங்கிரஸ் அலுவலக மாடியில் இந்தியக் கொடி ஏற்றப்பட்டது. கொடியை இறக்கவும் வீட்டைத் தகர்க்கவும் பொறுக்கிக் கூட்டம் முயன்றது. உடனே இளைஞர் காங்கிரஸ் இளைஞர்கள், பொறுக்கிகள் உள்ளே வராதபடி தெருக் கதவைத் தாளிட்டனர். பின் னர்ப் பொறுக்கிகள் கம்பத்தின் வழியாகவும் வேறு வழி யாகவும் மாடியில் ஏற முயன்றனர். மோதல் மிடுக்க டைந்தது. - அப்போது பிரெஞ்சுக்காரக் (போலீஸ்) காவல் துறைத் தலைவராகிய வெள்ளையர் அங்கே வந்தார். கதவைத் திறக்கும்படி கூறினார். கதவு திறக்கப்பட்டது. அவர் உள்ளே போய் மாடியில் கொடி ஏற்றியிருந்த இடத்தை அடைந்தார். பொறுக்கிக் கூட்டமும் அவருடன் சென்றி ருந்தது. கொடி இறக்கப்படும்போல் தெரிந்தது.