பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24 பணம் வாங்கி வா என்று அனுப்பினாராம். இதையறிந்த விடுதி உரிமையாளர், கவிஞர் என் விடுதிக்கு வந்ததே பெருமை! அதுவே போதும். மேற் கொண்டு பணம் தர வேண்டாம். கவிஞர் எப்பொழுது இராசிபுரம் வந்தாலும் என் விடுதியில் இலவசமாகத் தங்கிச் செல்லலாம் என்று கூறிப் பணம் வாங்காமலேயே வழியனுப்பி வைத்தாராம் ஒரு முறை சென்னையில், செளந்தர்ய மகால் என்னும் அரங்கத்தில், நடிகவேள் எம்.ஆர். இராதாவின் இலட்சுமி காந்தம் என்னும் நாடகம் கவிஞர் தலைமையில் நடை பெற்றதாம். அங்கு யாரோ ஒருவர், கவிஞரின் உதவி யாளரை மதிப்புக் குறைவாய் நடத்தியதைக் கவிஞர் கண்டு சினங் கொண்டு உதவியாளருடன் அரங்கத்திற்கு வெளியே வந்து விட்டாராம். பின்னர்த் தொடர்புடைய வர்கள் வந்து மன்னிக்கும்படி கவிஞரைக் கெஞ்சி வேண்டி உள்ளே அழைத்துச் சென்றனராம். பிறகு கவிஞருக்கு நடந்த சிறப்பெல்லாம் உதவியாளர்க்கும் செய்யப்பட்டன 6)] n`LD, மற்றொரு முறை கவிஞர் தம் உதவியாளருடன் சென்னை சென்றிருந்தாராம். பணப்பை (மணிபர்சு) உதவி யாளரிடமே தரப்பட்டு இருக்குமாம். செலவுக்கெல்லாம் பணம் உதவியாளர்தான் எடுத்துஎடுத்துக் கொடுப்பாராம். உதவியாளர் ஏதோ பொருள் வாங்கினாராம். அதைக் கவிஞர் அறியாராம். புதுவைக்குப் புறப்பட இருக்கும் கடைசி நாள், உயர்தர உணவுக்கடை ஒன்றிற்குச் செல்ல வேண்டும் என்று கவிஞர் கூற, அதற்குப் போதிய பணம் இல்லை என்று உதவியாளர் அறிவித்தாராம். உடனே கவிஞர், அப்படியெனில், தெரு ஒரம் உள்ள ஏதாவது ஒரு தேநீர்க் கடைக்குச் சென்று உரொட்டி வாங்கி உண்டு