பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

27 களத்திலிருந்து சென்றுகொண்டிருந்தபோது, இறந்தவன் போல் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டிருந்த நவாப் படையாள் ஒருவன் எழுந்து சென்று மகமத்கானின் பின் னால் படைக் கலத்தால் தாக்கி மகமத்கானைக் கொன்று விட்டான். திருமணத்தை இடையிலே நிறுத்திவிட்டுத் தனக்காக ஒடி வந்து பொருது வெற்றி தேடித் தந்த மகமத்கானின் பிரிவைத் தாங்க முடியாமல், நட்புணர்ச்சி மேலிட்டு மன் னன் தேசிங்கு தற்கொலை செய்து கொண்டான். உலகத் தில் இந்து மன்னன் தேசிங்கு-முசுலீம் நண்பன் மகமத்கான் ஆகியோரின் வரலாறு இருக்கும் வரை அகராதிகளில் நட்பு என்னும் சொல் இருக்கலாம். இத்தகைய சிறப் புடையது இந்தவரலாறு. இனிப் பாவேந்தர் தொடர்பான செய்திக்கு வருவோம். கவிஞரிடம் ஒருவர் இந்த வரலாற்றைக் குறிப்பிட்டு, முசுலீம் ஆகிய மகமத்கான், முசுலீம் ஆகிய நவாப் மன்ன னுக்கு ஆதரவாயில்லாமல், இந்து மதத்தின னாகிய தேசிங்கிற்கு ஆதரவு தந்தது எப்படி?- ஏன்?- என்று வின வினாராம். அதற்குக் கவிஞர், உடன் அமர்ந்திருந்த சுலை மான் என்னும் முசுலீம் நண்பரைச் சுட்டிக்காட்டி, 'இதோ ஒண்ணு இருக்குது பாருங்கள்-இது முசுலீம் தான்; இதுமுலிசும் லீக் கட்சியிலா இருக்குது? நம்ம கட்சி யிலேதானே நம்கூடத்தானே இருக்குது! - இதுபோல் தேசிங்கின் நண்பன் மகமத்கானும் ஒர் அப்பாவி- என்று கூறினாராம். உடனே சுலைமான் உட்பட அனைவரும் எழுப்பிய சிரிப்பு அலை அடங்க நெடுநேரம் ஆயிற்றாம்.