பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28 இவ்வாறு சென்ற இடமெல்லாம், கவிஞருக்குச் சிறப் பான- அன்பான பணி விடைகள் செய்வதைப் பெரும் பேறாக மதித்துப் பலர் பெருமை பெற்றனர், இப்படி எத்தனையோ செய்திகளைக் கவிஞர் கூற யான் கேட்ட றிந்திருக்கிறேன். 1950 ஆம் ஆண்டு என எண்ணுகிறேன் - சென்னை எழும்பூரிலுள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கே மாணாக்கர் கள் கவிஞரின் பாடல்களையே நிரம்பப் பாடிக்கொண் டிருந்ததைக் கேட்டு, நம்மூர்க் கவிஞருக்கு இவ்வளவு சிறப்பா ! - என வியந்தேன். புதுவை வந்த பின்னர், ஒரு நாள் கவிஞரிடம் நான் இதைக் கூறினேன். கேட்ட கவிஞர் புன் சிரிப்பை உதிர்த்தார். சென்ற இடமெல்லாம் கவிஞருக்குச் சிறப்பே காத்திருந்தது. வண்டிப் பாளையம் திருமணம்: 1951.கோடைக் கால விடுமுறையில் பாவேந்தர் தலைமை யில் வண்டிப் பாளையத்தில் நடைபெற்ற ஒரு திருமணம் பற்றிப் பார்ப்போம்: 1942 ஆம் ஆண்டு பாவேந்தரால் கடுமையான சொல் லடி பட்டுத் தாக்கப்பட்ட இராசாக் கண்ணனார், அதன் பிறகு எப்படியோ பாவேந்தரிடம் வந்து வந்து - கண்டு கண்டு நண்பராகிவிட் டிருக்கிறார். ஒரு நாள் நான் கவிஞரின் வீட்டிற்குச் சென்றபோது, இராசாக் கண்ண னார் கவிஞரின் வீட்டிற்கு வந்து தெருத் திண்ணையில் அமர்ந்து கவிஞரோடு பேசிக் கொண்டிருந்தார். யானும் சென்று இராசாக் கண்ணனார் பக்கத்தில் பெரிய திண்ணை யில் அமர்ந்தேன். கவிஞர் சிறிய திண்ணையில், ஒரு காலை