பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29 மேலே தூக்கித் திண்ணையில் ஊன்றிக்கொண்டும் மற் றொரு காலைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டும் அமர்ந் திருந்தார். இராசாக் கண்ணனார் கவிஞரை நோக்கி, உங்கள் மகனை நான் பார்க்கவேண்டும் - அழையுங்கள் என்றார். தம்பி என்று கவிஞர் குரல் கொடுத்தார். இளம் பிள்ளை யாகிய கோபதி (மன்னர் மன்னன்) வெளியில் வந்து இராசாக் கண்ணனார் பக்கத்தில் அமர்ந்தார். இராசர் அன்போடு கோபதியின் முதுகில் தட்டிக்கொடுத்தார். இராசாவுக்கு அது தட்டிக் கொடுத்ததாகத் தோன்ற லாம்; ஆனால் மற்றவர்க்கு, அது, முதுகில் ஓங்கி அறைந்த தாகவே தோன்றிற்று, இராசா முரடர் என்று நான் முன்பே சொல்லி யிருக்கிறேன். இராசா ஓங்கி அறைவது. போல் - வன்மையாக அடிப்பது போல் தட்டி விட்டார். சிறுவர் கோபதி வலி தாளாமல் முதுகை நெளித்து நெளித்து அசைத்தார். எனக்கு அச்சமா யிருந்தது கவிஞரின் புருவங்கள் நெரிந்தன - கண்கள் சுழன்றன. ஆனால், இராசாவைத் திட்டாமல், என்னப்பா இது - இப்படியா தட்டுவது என்று கூறி அந்த அளவோடு. நிறுத்திக் கொண்டார். தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போயிற்று. சிறிது காலம் கழித்து ஒருநாள் யான் பாவேந்தர் வீட் டிற்குச் சென்றபோது, உள்ளே நடு வாசலில் இராசாக் கண்ணனார் பாவேந்தரோடு பேசிக்கொண்டிருந்ததைக் கண்டேன். டாக்டர்’ பட்டம் பெறும் முறையைப் பற்றிய பேச்சு அது. அந்தக் காலத்தில் M.A. பட்டம் பெற்று M.A. வகுப்பில் பாடம் நடத்தியவர்தான் டாக்டர்’பட்டத்திற்கு ஆராய்ச்சி