பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30 மேற்கொள்ள முடியும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் "தாராளமான அவ்வளவு வசதி இருந்தது. என்ன கொடுமை! இராசா M.A.பட்டம் பெற்றவர்தான். அப் போது M.A. வகுப்பு உள்ள கல்லூரி மிகவும் குறைவாத லின், B.A.வகுப்பு வரையில் மட்டும் உள்ள கல்லூரிகளி லேயே, இராசா துறைத்தலைவராகவும் முதல்வராகவும் பணியாற்றினார். இராசாவுக்குச் சென்னையை நம்பிப் பயன் இல்லை. எனவே பிரான்சில் உள்ள ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தின் மூலம் டாக்டர் பட்டம் பெற முடி யுமா? என்று இராசா கவிஞரைக் கேட்டார். அதற்குக் கவிஞர் தக்க பதில் சொல்லிக்கொண்டிருந்தார். சிறிது காலம் கழித்ததும், புதுச்சேரி ஆசிரியர் பொன் னம்பலம் வீட்டுத் திருமணம் ஒன்று கவிஞர் தலைமையில் நடைபெற்றது. வாழ்த்துரை வழங்கியவர்கள் இராசாக் கண்ணனாரும் யானுமாவோம். மாலையில் வாழ்த்துச் சொற்பொழிவு. இராசா கவிஞரின் வீட்டில் வந்து தங்கி மாலைச் சிற்றுண்டி கவிஞரின் வீட்டிலேயே உட்கொண்டு கவிஞருடன் திருமண அரங்கம் சென்றார். பகைவர்களாக இருந்த கவிஞரும் இராசாவும் எவ்வளவு நெருங்கிய நண் பர்களாகிவிட்டனர் பாருங்கள்-என்றறிவிக்கவே இவ்வளவு சொன்னேன். இந்த நட்பு இறுதிவரையும் தொடர்ந்திருந் தது. இராசாக்கண்ணனார், கடலூர்-திருப்பாதிரிப்புலியூருக் குத் தெற்கே ஒரு கல் தொலைவிலுள்ள வண்டிப் பாளை யம் என்னும் ஊரினர். அவர் உள்ளூரிலேயே பெண்கட்டிக் கொண்டவர். அவருடைய மைத்துனர்-அதாவது மனைவி யின் தம்பி முருகையன் என்பவர். முருகையன் பிற்காலத் தில் சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் இந்திய மொழித்