பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31 துறைப் பொறுப்பாளராக இருபத்தைந்து ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அந்த முருகையனின் திரு மணத்தைப் பற்றித்தான் இனிச் சொல்லப் போகிறேன். இராசாக் கண்ணனார் புதுவைக்கு வந்து கவிஞரைக் கண்டு, முருகையன் திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்துமாறு கேட்டு இணங்கச் செய்து, கவிஞரை உரிய காலத்தில்-அதாவது முதல்நாள் மாலையே அழைத்து வரும்படி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துச் சென்று விட்டார். 1951-கோடை விடுமுறைக் காலம் அது. திருமணத்திற்கு முதல்நாள் மாலையே கவிஞ்ரை வண் டிப்பாளையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, முதல்நாள் பிற்பகல் மூன்று மணிக்கே கவிஞரின் வீட்டிற்கு நான் சென்றுவிட்டேன். அங்கே திருநாவுக்கரசு என்னும் ஒர் ஏழைப்புலவர் வந்திருந்தார். அவர் வேலை கிடைக்காத வர்-காசுஇல்லாதவர். அவருக்கும் திருமண அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்ததால் அவரும் எங்களுடன் திருமணத் திற்கு வருவதாகச் சொன்னார். அப்போது என் கையில் இருந்தது இரண்டேகால் உரு பாதான். அண்மையில் என் மனைவிக்கு ஒரு நகை வாங்கி விட்டதால் கையில் வேறு காசு இல்லை. திருநாவுக்கரசை நோக்கிக் காசு வைத்திருக்கிறாயா என்று கேட்டேன். என்னி டம் ஒரு பைசாகூட இல்லை என்று அவர் சொல்லிவிட்டார். இரண்டு உரூபா என்பது முப்பத்திரண்டு அணா கொண் டது. புதுவையிலிருந்து கடலூருக்குச் செல்லப் பேருந்து கட்டணம் பத்தணாவாகும். நான் ரிக்சாவண்டி கால் உரு பாவிற்கு அமர்த்திக் கவிஞரை ஏற்றிக் கொண்டு புதுவைப் பேருந்து நிலையம் சேர்ந்தேன். நான் கேட்டுக் கொண்ட படி, திருநாவுக்கரசு எங்கட்கு முன் நடந்து சென்று அங்