பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

33 நிலையத்தில், திருமண வீட்டார் ஒருவர் எங்களை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு குதிரை வண்டி அமர்த்திக் கொண்டு வந்து எங்கள் மூவரையும் ஏறச் செய்தார். வண்டி திருப்பாதிரிப் புலியூரின் தெற்கில் வண்டிப் பாளையத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. நகரின் எல்லையைக் கடக்க இன்னும் ஐந்து அல்லது ஆறு வீட்டுத் தொலைவு இருக்கும்போது, குதிரை தெற்கு நோக்கி வண்டிப்பாளையம் பக்கம் செல்லாமல், பின்னா லேயே நகர்ந்து நகர்ந்து திருப்பாதிரிப்புலியூர்ப் பக்கமே வண்டியை நகர்த்தியது. வண்டிக்காரர் எவ்வளவோ முயன்று பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. அப்போது நான் பின்வருமாறு ஒர் அறிவுரை வழங்கினேன்.அதாவது,'குதிரை பின்னாலேயே நகர்வதா யிருப்பதால், குதிரை யைத் திருப்பாதிரிப் புலியூர்ப்பக்கமே முகம் இருக்குமாறு திருப்பிவிட்டால், அது பின்னால் நகர்ந்து நகர்ந்து வண்டிப்பாளையம் போய்ச் சேர்ந்து விடும் என்றேன். எதற்கும் அவ்வளவு எளிதில் சிரித்து விடாத பாவேந்தர், யான் சொன்னதைக் கேட்டதும் வெடிச் சிரிப்பு சிரித்தார். இந்த நிலையில், தெருவின் இருமருங்கிலும் உள்ள வீட்டுக்காரர்கள் தெருவில் வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் சிலர் கீழே இறங்கி வேறு வண்டி வைத்துக்கொண்டு செல்லுமாறு எங்களைக் கட்டாயப்படுத்தினார்கள். நாங்கள் யாரும் இறங்க வில்லை. குதிரை வண்டிக்காரர் மீண்டும் குதிரையை அதட்டவே, குதிரை பின் நோக்கி நகர்வதை விட்டு, தெருவின் குறுக்கிலும் நெடுக்கிலும் மாறி மாறி நடந்து ‘மெய்க்கால் குதிரை நடனம் ஆடத் தொடங்கிவிட்டது. – 3