பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35 தினோம். வேறு குதிரை வண்டி வந்தது; வண்டிப்பாளை யம் போய்ச் சேர்ந்தோம். திருமண வீட்டார் அளித்ததையும் கவிஞர் உட் கொண்டார். இரவு விருந்தும் அருந்தப்பட்டது. அன்று இரவு ஒரு வீட்டு மாடியில் படித்துக்கொண் டிருந்தபோது, கவிஞர் பின்வருமாறு என்னிடம் ஒன்று கூறினார். அதாவது, - "சண்முகம்! சிலர், அங்கே சாப்பிட்டேன் - இங்கே சாப்பிட்டேன்; அது சாப்பிட்டேன் - இது சாப் பிட்டேன்; அதனால் வயிறு கெட்டுவிட்டது - என்று சொல்கிறார்களே - அதுபோல் எப்போதும் எனக்கு ஒன் றும் நேர்வதில்லை' - என்று கூறினார். நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். மறுநாள் & T Go Go) பாவேந்தரின் தலைமையில் முருகையனின் திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், மணமகன் முருகையன் எழுந்து நின்று, தேம்பித் தேம்பி அழுதுகொண்டே நன்றி கூறி 6TT斤, பின்னர், கவிஞர், இராசாக்கண்ணனார், நான் ஆகிய மூவரும் மற்றும் சிலரும், கவிஞர் தங்குவதற்கு என்று ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்குச் சென்றோம். அங்கே கவிஞர் எங்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:'முருகையன் அழுததைக் கண்டதும் எனக்கு (கவிஞர்க்கு) என் திருமணநாள் நினைவுக்கு வந்து விட்டது - என்பது கவிஞர் கூறிய செய்தி. அவரது திருமண நாளன்று அவரும் அழுதிருக்கிறார் போலும்! கவிஞர் கூறியதைக் கேட்டதும், எனக்கு (சு.ச. வுக்கு) என் திருமணநாள் நினைவுக்கு வந் தது; அன்று முழுவதும் நான் அழுது கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தேன்.