பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36 பொதுக் கூட்டம்: இது வரையும் வராத கவிஞர் வண்டிப் பாளையம் வந்து விட்டதால், அன்று மாலை கவிஞர் தலைமையில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தியே தீர வேண்டும் என்று ஊரார் வலியுறுத்தினர். கவிஞரும் ஒத்துக் கொண்டார். அதனால் அன்று முழுதும் நாங்கள் வண்டிப் பாளையத் திலேயே தங்கவேண்டியதாயிற்று. அன்று பிற்பகல் நான்கு மணிக்குக் கவிஞரின் உறவினர் ஒருவர் தம் வீட் டிற்கு வருமாறு அழைத்தார். கவிஞரும் நானும் சென்றோம். ஒரு பழைய வீடு-நடையில் போட்டிருந்த ஒர் ஒட்டை விசிப் பலகையில் அமர்ந்தோம். தேநீர் தந்தனர்-பருகினோம். பார்ப்பதற்கே அச்சமான நோக்கும் தோற்றமும் கொண்டவரும் கடுஞ் சொல்லருமாகிய கவிஞர், அந்த ஏழை வீட்டிலே ஒரு சிறு குழந்தையாகி விட்டார். இடையறாது சிரித்த முகம் - மெல்லிய தாழ்ந்த இனிய குரல் - இன்ன பிற நயமான பாணியில் கவிஞரைக் கண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வண்டிப் பாளையம் ஊருக்குள் தென்னை மரங்கள் நிரம்ப உண்டு. ஊரைச் சுற்றிலும் தென்னந்தோப்புகள் மிகுதி. தென்னந் தோப்பிற்கு நடுவில் இருப்பதால்தான் இந்த ஊர் குளிர்ச்சியாயிருக்கிறது என்று கவிஞர் சொன்னார். ஊருக்குச் சிறிது தொலைவில், கெடிலம் ஆற்றிலிருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஓடுகிறது. அதன் ஒரு கரை முழுவதும் தென்னந்தோப்புகளும் மற்றொரு கரை முழுவதும் பச்சைப் பசேர் என்ற பயிர் வகைகளும் உள்ளன. வாய்க்கால் கரையில் உள்ள ஒரு தென்னந் தோப்பை வாய்க்கால் மேடு என ஊரார் வழங்குவர். மாலை ஐந்து மணிக்கு அந்த வாய்க்கால் மேட்டிற்குக் கவிஞரை அழைத்துச் சென்றோம்.