பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37 ‘அழகின் சிரிப்பு எழுதி இயற்கையில் திளைத்திருந்த கவிஞர், அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மிக வும் சுவைத்தார். 1942 ஆம் ஆண்டு புதுவை-உப்பளம் கூட்டத்தில் பாவேந்தர் என்னைக் கடுமையாகத் தாக்கிப் பேசியபோது உடனிருந்த சம்பந்தனார் என்னும் புலவர், அந்த வாய்க்கால் மேட்டிற்கு எங்களுடன் வந்திருந்தார். அவர் கவிஞரை நோக்கி, நீங்கள் ஒருமுறை புதுவை உப் பளம் கூட்டத்தில் சண்முகத்தை மிகவும் மட்டப் படுத்தித் தாக்கிப் பேசினீர்கள் அல்லவா? இப்போது எப்படி? - என்று பழைய செய்தியை நினைவு கூர்ந்தார். அதைக் கேட்டுக் கவிஞரும் நானும் சிரித்துக் கொண்டோம். மாலை ஆறு மணிக்குப் பொதுக் கூட்டம் தொடங்கி முன்னிரவு ஒன்பது மணிக்கு நிறைவுற்றது. ஊரார் மிகவும் மகிழ்ந்தனர். இரவு விருந்து முடிந்தபின்ஒய்வுகொண்டோம். மறுநாள் காலை நாங்கள் புதுவைக்குப் புறப்பட்ட போது, போக்கு வரவுச் செலவிற்காகவும் கவிஞர் வந்ததற் காகவும் இராசாக் கண்ணனார் நூறு உரூபாவோ அல்ல்து ஐம்பது உரூபாவோ தரவில்லை; என்னிடம் ஏழே ஏழு உரூபா தந்து, போதுமா - இது குறைவா’ என்று வினவி னார். நான், இது மிகுதி என்று கூறி இரண்டு உரூபாயை அவரிடமே தந்து ஐந்து உரூபா மட்டுமே பெற்றுக் கொண்டேன். ஊர் வந்ததும் இதைக் கவிஞரிடம் அறிவித் தேன். அதற்கு அவர், ஐந்து உருபாகூட வாங்கியிருக்க வேண்டியதில்லை; இலவசமாகவே செய்திருக்கலாம்’என்று கூறினார். நான் என் சட்டைப் பையைத் தடவிக் கொண்டேன். இலவசத்திற்கு என்னிடம் பணம் ஏது? நாங்கள் மூவரும் மீண்டும் கவிஞர் வீடுவந்து சேரும் வரையும் முன் போலவே வண்டி செலவாயிற்று. என் வீட்