பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38 டிற்கு வந்து என் மனைவியிடம் இதைக் கூறிய போது, யான் இராசாக்கிண்ணனாரிடம் இரண்டு உரூபாவைத் திருப்பிக்கொடுத்துவிட்ட வறுமையில் செம்மைப் பண்பை எண்ணி வியப்படைந்தாள். - - - வழியனுப்பும் படலம்: மணமகன் முருகையன் தொடர்பான ஒரு செய்தி இங்கே நினைவுக்கு வருகிறது; அதையும் சொல்லி வைக்கி றேன். முருகையன் திருமணம் ஆனதும் சிங்கப்பூர் சென்று 'தமிழ் முரசு’ என்னும் நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரிந் தார். பின்னர்ச் சிங்கப்பூர் வானொலியில் இந்திய மொழித் துறையின் பொறுப்பாளராகப் பணியாற்றினார். அவர் ஒரு முறை விடுமுறையில் கடலூர் வந்து தங்கியிருந்தார். அப்போது ஒருநாள் அவர் புதுச்சேரிக்கு வந்து என் வீட் டில் என்னைக் கண்டார். பாரதிதாசனைப் பார்க்க வேண் டும் என்றார். நிரம்பப் பழ வகைகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். நானும் முருகையனும் பாவேந்தர் வீட்டிற்குச் சென் றோம். அப்போது பாவேந்தர் வீட்டு நடு வாசலில் அமர்ந் திருந்தார். பழங்களை எதிரில் வைத்துவிட்டு நாங்கள் வணக்கம் செலுத்தினோம். அவர் தலையசைத்துவிட்டு எழுந்து பின் கட்டிற்குச் சென்றார். சிங்கப்பூரிலிருந்து முருகையன் வந்திருப்பதால் காபி கொண்டு வந்து தர ஏற் பாடு செய்வதற்காகக் கவிஞர் உள்ளே சென்றிருக்கிறார் என நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், சேதி தெரியுமா? - - சிறிது நேரத்தில் கவிஞர் உள்ளேயிருந்து வந்து நேரேவெளியே தெருப்பக்கம் சென்றார். நாங்கள் நீண்ட நேரம்