பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39 உள்ளே நடுவாசலிலேயே அமர்ந்திருந்தோம். நெடு நேரம் ஆகியும் கவிஞர் உள்ளே வரவில்லை. காத்திருந்த நாங்கள் வெளியே சென்றோம். அங்கே கவிஞர் தெருத் திண்ணை யில் அமர்ந்திருந்தார். எங்களைக் கண்டதும் போய் வருகிறீர்களா?” என்று சொல்லிவிட்டு விடுவிடு' என்று உள்ளே சென்றுவிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னிடம் இதுகாறும் இவ்வாறு நடந்துகொண்டதில்லை. ஒரே ஒரு முறை அவர் மாடியில் இருந்தபோது நான் சென்று பார்க்க முடியாமல் திரும்பிவிட்டேன். அதற்கு உரிய காரணம் வேறு. இப்போது என்னிடம் கூடப் பேசாமல் வெளியே அனுப்பி விட்டதில் ஏதோ மறைபொருள் இருக்கிறது என்று எண்ணினேன். முருகையனை இப்போது பிடிக்கா திருக்கலாமோ என்றும் கருதினேன். பின் முருகையனை நோக்கி, ‘என்ன முருகையா-நீ இதற்கு முன் வந்தாயா -கவிஞரோடு எது பற்றியாவது தொடர்பு கொண்டாயாஅது அவருக்குப் பிடிக்காதிருக்கலாமா?’ என்று யான் வினவி னேன். முருகையன் உண்மையைச் சொல்லிவிட்டார்: இதற்கு முன் ஒரு முறை கவிஞரைக் கண்டு, தம் மைத்து னருக்குப் பெண் கொடுக்கும்படி கேட்டாராம்; பிறகு பார்ப்போம் என்று கவிஞர் சொன்னாராம்; அதனால் இப்பொழுது வந்தாராம்-இது முருகையனின் பதில். பெண் கொடுக்க விருப்பமின்மையால் கவிஞர் பத மாக அனுப்பி விட்டார் என்று நான் புரிந்து கொண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். பின்பு ஒருநாள் கவிஞ ரிடம் இதை நான் நினைவுபடுத்தியபோது புன்முறுவல் பூத்தார். -