பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

5 திருச்சியில் மணிவிழா 1951 ஆம் ஆண்டு கவிஞருக்குத் திருச்சிராப்பள்ளியில் அறுபது அகவை நிறைவு விழாவாகிய மணி விழா நடை பெற்றது. முதலில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ. பெ. விசுவநா தன்.அவர்களின் மேற்பார்வையில் நடைபெறுவதாக இருந் தது. பிறகு யதார்த்தம் பொன்னுசாமி என்பவர் மணி விழாப் பொறுப்பைத் தாம் ஏற்று நடத்தினார். விழா ஒருவார காலம் திருச்சித் தேவர் அரங்கில் நடை பெற்றது. முற்பகல்-பிற்பகல் இரண்டு வேளையும் சொற் பொழிவுகள் நடந்தன. மாலை கழிந்ததும் இரவில் நாடகம், இசையரங்கு, பல்லிய விருந்து முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தக் கலை நிகழ்ச்சிகளுள், என்.எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவின் இழந்த காதல்’ என்னும் நாடகமும், எம்.கே. தியாகராசபாகவதரின் இன்னிசை நிகழ்ச்சியும் குறிப்பிடத் தக்கன. பேச்சாளர்க