பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41 ளுக்குள் திரு.நெடுஞ்செழியனும் திரு. அன்பழகனும் குறிப் பிடத் தக்கவர்கள், கூட்டத்திற்குச் செல்லக் கட்டணம் உண்டு. கட்டணச் சீட்டு வாங்கியவர்களே அரங்கிற்குள் நுழைய முடியும். வெளியூர்களிலிருந்து பலர் வந்திருந்தனர். புதுச்சேரியிலி ருந்து நானும் சிலரும் சென்றிருந்தோம். கவிஞரின் குடும் பத்தார் அனைவரும் வந்திருந்தனர். எங்களுக்குக் கட்ட ணம் இல்லை. கவிஞரும் அவர்தம் குடும்பத்தாரும் உறவினர்களும் நண்பர்களும் அன்பர்களும் தங்குவதற்குத் திருவானைக் காவிலுள்ள ஒரு சத்திரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்சிக்கும் திருவானைக்காவுக்கும் இடையே காவிரியாறு உள்ளது. காவிரியின் தென் கரையில் திருச்சியும் அதன் நேர் வடகரையில் திருவானைக்காவும் உள்ளன. GT肪fö ளுக்கு உணவும் திருவானைக்கா சத்திரத்தில் தான் அளிக் கப்பட்டது-இலவச உணவே. ஒருநாள் மதியம் மோர் தண்ணிராக இருந்தது. என்னய்யா! ஒரு செம்பு தயிரைக் கிணற்றில் கொட்டிவிட்டுப் பிறகு மொண்டு கொண்டு வந்து மோர் எனப் போடுகிறீர்களா? என்று கவிஞர் நகைச்சுவையாகக் கூறினார். அனைவரும் சிரித்துவிட் டோம். கவிஞர் என்றால், பாட்டு எழுதினால் மட்டும் போதாது-பாடவும் தெரிய வேண்டும் எனக் கவிஞர் கூறிச் சில பாடல்களைப் பாடிக் காட்டினார். அனைவரும் மிகவும் சுவைத்துக் கேட்டு மகிழ்ந்தோம். பார்ப்பன நண்பர்கள்: திருவானைக்கா சத்திரத்தில் தங்கியிருந்த எங்கள் குழுவினருள், தாழ்த்தப்பட்ட இனத்தினர், சலவைத் தொழிலாளர், பார்ப்பனர் முதலிய பல குலத்தினரும்