பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

6 சு.ச. தொடர்பானவை அணிவகுப்பு: சுந்தர சண்முகம் என்னும் என் தொடர்பான செய்தி கள் சிலவற்றை இனிச் சொல்ல விரும்புகிறேன்: கவிஞர் புதுச்சேரி வட்டாரத்தில் எங்கேனும் செல்வதாயிருந்தால், தம்முடன் ஐந்தாறு பேரை அழைத் துச் செல்வார். சில சமயம் எண்ணிக்கை இன்னும் மிகுதியா யிருக்கும். உடன் செல்பவர்களுள் நானும் ஒருவனாக இருப்பதுண்டு. நான்கைந்து ரிக்ஷா வண்டிகள் வரிசை யாகத் தொடர்ந்து செல்வது போருக்கு அணி வகுத்துச் செல்வதுபோல் இருக்கும். வழியில் இருப்பவர்கள் இந்தக் காட்சியை வியப்புடன் காண்பர். கோபதிக்குப் பாடம் நான் மயிலம் தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர்