பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46 ரிடம் இந்த மோதலைத் தெரிவித்தேன். அதற்கு அடிக ளார், மலத்தில் கல் போட்டால் நம்மேலேயே தெளிக்கும்; அதனால் ஒதுங்கி விடுவது நல்லது-என்று கூறி என் னையே ஆதரித்தார்கள். ஏதோ பேச்சு வந்தபோது பாவேந்தரிடம் இதைக் கூறினேன். அதற்கு அவர் கூறிய கருத்து:- அதுதான் மலம் என்று தெரிகிறதே. அந்த மலத்தை நடுவிட்டில் வைத்திருப்பது ஏன்? என்பதாகும். கையிருப்பு உள்ளவன் ஒருநாள் கவிஞர் வீட்டு நடுவாசலில் அமர்ந்து நான் அச்சுப்பிழை திருத்திக்கொண்டிருந்தபோது, சிறிது தொலைவில், பார்க்கவந்தவர்களிடம் கவிஞர் பின்வரு மாறு என்னைப் பற்றிக் கூறியது என்காதில் விழுந்தது. அதாவது,- சுந்தர சண்முகம் பெரிய கையிருப்பு உடைய வர்-அவரைச் சொற்பொழிவிற்கு அழைத்துச் செல்லுங் கள் என்பதாம். பண்ணுருட்டிக் கூட்டம் 1949-ஆம் ஆண்டு கள்ளக் குறிச்சியை அடுத்த வடக் கனந்தல் என்னும் ஊருக்கு யான் சொற்பொழிவிற்காகச் சென்று திரும்பியபோது, புதுவை வருவதற்கு வேறு பேருந்து மாறுவதற்காகப் பண்ணுருட்டியில் இறங்கினேன். அப்போது, பண்ணுருட்டியில் அன்று மாலை பாரதிதாச னார் தலைமையில் பெரியார் ஈ.வே. இராமசாமியவர் களும் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களும் சொற்பொழி வாற்றப் போகிறார்கள் என்ற செய்தியை அறிந்தேன். உடனே சொற்பொழிவுத் திடலை அடைந்தேன். பெரியார் காலத்தோடு வந்துவிட்டார். அவைத் தலைவர் பாரதிதாசனாரும் சொற்பொழிவாளர் அண்ணா