பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ஆசிரியர் முன்னுரை 1968 ஆம் ஆண்டு சனவரி முதல் பத்து நாள் சென் னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற் றது. அம்மாநாட்டிற்கு யானும் ஒரு பேராளனாகச் சென் றிருந்தேன். மாநாட்டுக் கருத்தரங்கிற்கு ஒரு ஞாயிற் றுக் கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது. அந்த ஞாயிறு விடுமுறையில், சென்னை லிங்கி செட்டி தெருவில் உள்ள மறைமலையடிகள் நூல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அந்நிலையம், சென்னை-சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் மேலாட்சியில் உள்ளதாகும் நான் நூல் நிலையத்திற்குச் சென்றபோது, அங்கே, கழக ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளை, தேவ நேயப்பாவா - னர், செக்கோஸ்லோவாகியாத் தமிழறிஞர் கமல் சுவல பெல் முதலியோர் இருக்கக் கண்டேன. உரையாடலுக்கிடையே, சுப்பையா பிள்ளை என்னை நோக்கி, உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதிக்கொடுங் கள்-நாங்கள் வெளியிடுகின்றோம் என்று கூறினார்.