பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48 நூலுக்கு முற்பகுதியில் யான் எழுதிய கதைச் சுருக் கம் அச்சடிக்கப்பட்டு அமைந்தது. கவிஞர் தம் முன்னுரை யில், யான் கதைச் சுருக்கம் எழுதியதைக் குறிப்பிட்டு, என்தோழர் புலவர் சுந்தர சண்முகனார்க்கு என் நன்றி என்று எழுதியுள்ளார். அந்நூலின் வாயிலாக வெளி யுலகுக்கு என்னை அறிமுகப்படுத்திய கவிஞருக்கு என்றும் என் நன்றி உரியது. அணிந்துரை: 1948-ஆம் ஆண்டு யான் தனித் தமிழ்க் கிளர்ச்சி’ என்னும் செய்யுள் நூல் எழுதி வெளியிட்டேன். அந்நூற்கு அணிந்துரை தருமாறு பாவேந்தரைச் கேட்டேன். அவர் தட்டாது அணிந்துரை எழுதித்தந்தார். அது வருமாறு: “தனித்தமிழ்க் கிளர்ச்சி எனுமொரு நூலைத் தனித்தமிழ்ச் செய்யுளால் உள்ளம் இனித்திடத் தந்தார் புலவர் சண்முகனார் இத்தமிழ் நாட்டினர் இதன் ல் மனைக்கொரு படியென வாங்குக நாளும் மணிக்கொரு முறையதைப் படிக்க. தினைத்துணை உழைப்பில் பனைத்துணைப் பயனைச் சேர்க்கும்.இந் நூலெனல் மெய்யே’’. என்பது கவிஞர் தந்த அணிந்துரைப்பாடல். யான் நூலின் மேல் அட்டையில் படத்திற்குப் பதிலாக இப்பாடலை அமைத்து விட்டேன். இப்போது இந் நூலின் படி (பிரதி) ஒன்றே ஒன்றுதான் உள்ளது. மாதிரிக்காக அப்படியைக் காத்து வைத்திருக்கிறேன்.