பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50 ரகர-றகர அகர முதலி: தமிழில் ரகர-றகரங்கள் வரும் சொற்களுக் கிடையே உள்ள வேறுபாட்டை அறியாதார்க்குத் துணைபுரியும்படி, தமிழில் ர-ரெள, ற -றே ஆகிய எழுத்துகள் இடம் பெற்றுள்ள சொற்கள் அனைத்தையும் திரட்டி அகர வரிசைப்படுத்தி ஓர் அகர முதலி நூல் உருவாக்கினேன். அதை வெளியிடும்படி கவிஞரிடம் தந்தேன். எப்படியோஅதை வெளியிடும் வாய்ப்பு நேராமல் போய் விட்டது. அந் நூற் கையெழுத்துப் படியை ஏழு ஆண்டுகட்கு முன்பு, கவிஞரின் மகன் மன்னர் மன்னன் எங்கள் வீட்டிற்குக் கொண்டுவந்து கொடுத்துச் சென்றார். அந்நூல் எழுதியது 1948-ஆம் ஆண்டு. அதை வெளியிடும் வாய்ப்பு எப்போது ஏற்படுமோ தெரியவில்லை. ஆதித்தன் கனவு சேலம் மாடர்ன் தியேட்டர் என்னும் திரையோவிய நிறுவனத்தார் 'ஆதித்தன் கனவு’ என்னும் ஒரு திரை யோவியம் (சினிமாப் படம்) எடுத்தனர். அதற்கு உரை யாடல்-வசனம் கவிஞர். அவர் விரைவாகக் கிறுக்கு எழுத் தில் எழுதிய அத்தனை வசனப் பகுதியையும் நான் நல்ல எழுத்து வடிவில் பெயர்த்து எழுதித்தந்தேன். இதனால் திரையோவியத்திற்குக் கதை வசனம் எழுதுவது எப்படி என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், யாரும் அந்த வாய்ப்பை எனக்குக் கொடுக்க மாட்டார்கள் அல்லவா? அதற்கென்று தனியாகப் பிறக்கவேண்டும் போலும்! வேலைக்குப் பரிந்துரை: 1951ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழ கத்தில் தமிழ் விரிவுரையாளர் பதவிக்கு விளம்பரம் வந்