பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

51 தது. அதற்கு நானும் வேண்டுதல் (விண்ணப்பம்) அனுப்பி னேன். பல்கலைக் கழகத் தமிழ் வித்துவான் வகுப்பிற்குப் பாடம் நடத்த வேண்டும். யான் முன்னமேயே மயிலம் தமிழ்க் கல்லூரியில் வித்துவான் வகுப்பில் பாடம் நடத் திய பட்டறிவு உடையவன். பல நூல்களும் எழுதியுள் ளேன். அதனால் வேண்டுதல் அனுப்பினேன். அப்போது அப்பல்கலைக் கழகத்தில் மணவாள ராமா நுசம் என்னும் பெரியார் துணைவேந்தராக இருந்தார். அவர் கவிஞருக்கு மிகவும் வேண்டியவர். எனவே, கவிஞ ரைப் பரிந்துரைக்கும்படி வேண்டினேன். கவிஞரும் ஒத்துக் கொண்டார். ஒரு நாள் காலை புறப்படுவதாக இருந்த நிலையில், முதல் நாள் மாலையே, அவ்வேலை வேறு ஒருவருக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாக என் நண் பர் ஒருவர் தொலைவரி (தந்தி) வாயிலாக எனக்குத் தெரிவித்து விட்டார். அதனால் எங்கள் பயணம் நின்று விட்டது. நான் புதுச்சேரி அரசு ஊழியத்திலிருந்து ஒய்வு பெற்றபின், அதே அண்ணாமலைப் பல்கலைக் கழக அக ராதித் துறையில் வந்து சில காலம் பணிபுரியும்படி, தமிழ்த்துறைத் தலைவரே புதுவை வந்து நேரில் என்னைக் கேட்டார். நான் போக முடியாமற் போய் விட்டது. எப்படியோ பல்கலைக்கழகம் ஏதாவது ஒன்றின் தொடர்பு என்னை விடவில்லை. தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைப் பேராசிரிய ராகவும் தலைவராகவும் வந்து பணிபுரியும்படி வலிய அழைக்கப்பட்டேன். வெளியூர் சென்று பணி புரிய நான்