பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறுத்தும், துணைவேந்தரின் வற்புறுத்தலாலும் நண்பர் களின் தூண்டுதலாலும் 1982-83 ஆண்டு காலத்தில் தஞ்சை சென்று பணி புரிந்து, பிறகு நானாகவே பதவி விலகி வந்துவிட்டேன். நான் இதுவரை வேலை பார்த்துள்ள நான்கு நிறுவனங்கட்கும் நிறுவனத்தார்களாலேயே அழைக்கப்பெற்றேன். முத்தியால் பேட்டையில்: 1948 அல்லது 1949 ஆம் ஆண்டாயிருக்கலாம் என எண்ணுகிறேன். புதுச்சேரி நகருக்கு வடக்கே ஒரு கல் தொலைவில் உள்ள முத்தியால் பேட்டையில் ஒர் இலக் கியக் கழகத்தின் ஆண்டு விழா பாவேந்தர் தலைமையில் நடைபெற்றது. பேச்சாளர்கள் பேராசிரியர் திரு அன்பழக னும் டாக்டர் நன்னனும் ஆவர். நன்னன் அப்போது இளை ஞர்; புலவர் பட்டம் மட்டுமே பெற்றவர்; கோவை உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண் டிருந்தார். சொற்பொழிவாளர் இருவரும் சிறப்பாகக் கருத்து மழை பொழிந்தனர். நிறைவுரையாகக் கவிஞர் பல செய் திகள் தெரிவித்தார். அவற்றுள் ஒன்று: 'சுப்பிரமணிய பாரதியார் மது அருந்தியதாக அவரைச் சிலர் குறைத்துப் பேசுகின்றனர். ஏன் நாம் மது அருந்தவில்லையா ? என் பது ஒரு கருத்து. தம் வழிகாட்டியாகிய பாரதியாருக்காகக் கவிஞர் பரிந்து பேசியது அவரது நன்றியுணர்வை அறி விக்கிறது; பாரதியாரின் தாசர் அல்லவா? கூட்டம் முடிந்ததும் சில ரிக்சா வண்டிகள் கொண்டு வரப்பட்டன. கவிஞர் வேறு யாரையும் பொருட்படுத்தா