பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

53 மல் என்னை ஒரு பொருளாக மதித்து, சண்முகம் இங்கே வா! என் வண்டியில் நீ ஏறிக்கொள்’ என்று கூறி என்னை அவர் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார். வண்டியில் புதுவை நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு கருத்து வருமாறு: 'என் மகன் கோபதிக்காக நான் , யாரிடமும் பரிந் துரைக்குப் போவதில்லை. அவனைத் தேர்வில் வெற்றி பெறச் செய்யவோ-அவனுக்கு வேலை வாங்கித் தருவதற் காகவோ நான் யாரிடமும் போய்க் கெஞ்சுவதில்லை. அவ னுக்காகத்தான் பழநியம்மா மின்விசை அச்சகம்’ என்னும் அச்சகத்தை அமைத்திருக்கிறேன். எனக்குப்பின்னால் அவன் இந்த அச்சகத்தை நடத்தி வாழ்க்கையை நடத்தட்டும் என்று இருக்கிறேன் -என்று என்னிடம் தெரிவித்தார். ஆனால் கோபதியாகிய மன்னர் மன்னன் இப்போது இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றுகின்றார். தலைமை மறுப்பு: புதுவை மாநிலம் 1954ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் அன்று பிரெஞ்சுக்காரரிடமிருந்து விடுதலை பெற் றது. அதன் பிறகு நடைபெற்ற புதுவை மாநிலச் சட்ட மன்றப் பொதுத் தேர்தலின்போது, கவிஞர் தம் இல்லம் உள்ள காசுக்கடைத் தொகுதியில் ஒரு வேட்பாளராக நின்றார். அவருக்காகப் புதுவை ஒதியஞ் சாலைத் திடலில் ஒரு தேர்தல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும்படி கவிஞர் என்னிடம் கூறினார்.