பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55 பாடலும் இடம் பெற்றிருந்தது. விழாவில் அம்மலரை வெளியிட்டவர் தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந் தரம் பிள்ளை யவர்களாவார். மீனாட்சி சுந்தரனார்க்கும் பாவேந்தருக்கும், முன்பே பல ஆண்டுகளாகக் கருத்து மோதல் உண்டு. மலரை வெளியிட்ட தெ.பொ.மீ. பாரதிதாசனது பாடல் பகுதி யைக் குறிப்பிட்டு, பாரதிதாசன் என்ன கட்டுக் கதையாஅவர் பல கட்டுக் கதைகள் எழுதியிருந்தாலும்...' என்று பாவேந்தரைப் பற்றிக் குத்தலாகப் பேசினார். இது பல ருக்குப் பிடிக்கவில்லை. அடுத்து, விழாவின் ஒரு நாள் காலை நிகழ்ச்சி தெ. பொ.மீ. அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அன் றைக்கு, செந்தமிழ் ஆற்றுப் படை என்னும் எனது நூல் அரங்கேற்றம் செய்யப்பெற்றது. நூல் தொடர்பாக யான் சொற்பொழி வாற்றினேன். தெ.பொ.மீ. குறிப்பாக என் னைத்தாக்கிக் குறைவு படுத்திப் பேசினார். பொறுத்திருந் தேன். என்னை அடுத்து, தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் முதல்வராய்ப் பணியாற்றிய முதுபெரும்புலவர் சரவணஆறுமுக முதலியார் சொற்பொழி வாற்றினார். அவர் பாரதிதாசனின் பெருமையைக் கூறி ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார். உடனே தெ.பொ.மீ. அவரை இடை மறித்து, நேரமாய்விட்டது. இங்கே யார் பாட லையும் பாடவேண்டாம்-சீக்கிரம் முடித்துக் கொள்ளுங் கள் என்றார். பாடக் கூடிய பாட்டுத்தான்-பாடுகிறேன் என்று ஆறுமுகனார் அறிவித்தார். அதன் பிறகும், பாடக் கூடாது எனத் தெ.பொ.மீ. மறுத்து விட்டார்.