பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4 ‘என்ன-கிண்டலா செய்கிறீர்கள்? தன் வரலாறு எழுதும் அளவுக்கு யான் பெரியவனாகி விட்டேனா? என்று நான் அவரைக் கேட்டேன். அதற்கு அவர், 'உங்கள் வரலாற்றை எழுதினால், நீங்கள் பழகிய திருப்பாதிரிப் புலியூர் ஞானி யார் அடிகளார், பாரதி தாசன் முதலியோரைப் பற்றிய குறிப்புகள் எல்லாம் வருமே-அவற்றைப் பலரும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமே- அதற்காகத்தான் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதச் சொல்கிறேன்-என்று கூறி 6&TTт. இஃது இருக்க, ஏன் நீங்கள் பாரதிதாசனைப் பற்றி ஒன்றும் நூல் எழுதவில்லை? என்று உள்ளுரிலும் வெளி யூர்களிலும் உள்ள பலர் என்னைக் கேட்கின்றனர். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் மொழித்துறைத் தலைவர் உயர்திரு டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் அவர் களும் அவ்வாறு என்னைக் கேட்டவர்களுள் ஒருவராவார். ஆனால், யான் பாரதிதாசனாரைப் பற்றி நூல் எழுதும் முயற்சியை மேற்கொள்ளாமலேயே இருந்தேன். இந்நிலை யில், இச்சிறு நூலை எழுத எனக்கு ஒரு தூண்டுகோல் கிடைத்தது. இந்த ஆண்டு பாரதி தாசனாரின் 97 ஆவது பிறந்த நாள் விழாவைப் புதுச்சேரி மையப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. விழாக் கருத்தரங்கில் என்னையும் கட்டுரை படிக்கும்படி மையப் பல்கலைக்கழகம் பணித்துள்ளது. அதற்காகக் கட்டுரை எழுதத் தொடங்கினேன். அப்போது இப்படி ஒர் எண்ணம் ஏற்பட்டது: அதாவது, பாரதிதாச னாரோடு நாம் பல ஆண்டுகள் பழகியுள்ளதை அடிப் படையாக வைத்துப் பாரதி தாசரொடு பல ஆண்டுகள் என்னும் பெயரில் ஒரு சிறு நூலே எழுதிவிடவேண்டும் என்னும் எண்ணம் தோன்றியது. அதன் பயனே இந்நூல் வெளியீடாகும்.