பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

58 uqsirotiri. QË 5 GT60sir QLufř“Boswell’s Life of Johnson” என்பதாகும். இந்நூலே, உலகில் எழுதப்பட்டுள்ள தனி மாந்தரின் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்குள் முதன்மை யானது என்று புகழப்படுகின்றது. காரணம்: இந்த நூலில் ஜான்சனைப் பற்றிய எளிய செய்திகளும் சில்லறைச் செய்திகளும் சுவையாகச் சொல்லப்பட்டிருப்பது தானாம். ஜான்சன் உண்ணும்போது இரு கன்னங்களும் புடைத்துக் கொள்ளுமாம். இவ்வாறு ஜான்சன் உண்ணுதல் முதற் கொண்டு பல எளிய செய்திகள் ஒவியப்படுத்தப்பட்டுள் ளன. நான் சென்னைப் பல்கலைக் கழக இன்டர்மெடியட் (Intermediate)தேர்வுக்குப் படித்தபோது, இந்த நூல் ஆங் கில ஆழ்ந்த உரைநடை நூல் பாடமாக (Detail-Prose) வைக்கப்பட்டிருந்தது. அதனால் இந்நூல் பற்றி எனக்குத் தெரியும். எனவே, பாவேந்தர் உணவு கொண்டதைப் பற்றி யான் கூறலாம். கூட்டம் நீண்ட நேரம் நடந்ததால் உணவு கொள்ள இரவு பதினொருமணி ஆய்விட்டது. அந் நேரத்தில் எல்லாப் புலால் உணவையும் கவிஞர் மகிழ்ந்து உண்டார். அவித்துச் சாந்து பிசறி வறுத்த முழு முழு முட்டைகளை உருளைக்கிழங்கு பொரியலைத் தள்ளுவது போல் கவிஞரின் இலையில் தள்ளினர். அந்தக் காட்சி யைக் கண்டதும், எனக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு விட்டதுபோல் தோன்றிற்று. ஆனால் கவிஞருக்கு ஒரு கோளாறும் இல்லை. புகையிலை வாணிகம் புரிந்த திரு சாமிநாதன் என் பவரின் இல்லத்தில் தான் இவ்விருந்து நடைபெற்றது. அவருக்கு நன்றி செலுத்திவிட்டு மறுநாள் காலை புதுவை திரும்பினோம்.