பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59 நான் உண்டவை கவிஞருடன் பல்லாண்டு பழகிய நான், அவரது வீட் டில் உண்டவை பற்றிக் கூறுவேன். 1. ஒரு நாள் வெந்நீர் வாங்கிப் பருகினேன். 2. ஒரு நாள் பொரிவிளங்காய் உருண்டை என்னும் தின்பண்டம் ஒன்று தந்தார்கள்-தின்றேன். 3. வெளியூர்ச் சொற்பொழிவிற்காக ஒரு நாள் காலை கவிஞரும் யானும் செல்லவேண்டியிருந்தது. எந்த ஊருக்கு என்று இப்போது நினைவில்லை. முதல் நாள் மாலையே கவிஞர் என்னை நோக்கி, சண்முகம்! நீ நாளை அதிகாலை யிலேயே வந்து விடு-உங்கள் வீட்டில் சிற்றுண்டி சாப்பிட வேண்டாம்-நேரமாகி விடக்கூடும்-நீயும் எங்கள் வீட்டி லேயே சிற்றுண்டி அருந்திச் சீக்கிரம் புறப்படலாம் -என் றார். யான் அவ்வாறே மறுநாள் மிகவும் காலையிலேயே கவிஞர் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். கவிஞர் தனியாகச் சாப்பிட்டிருக்கிறார். யான் சென் றதும் எனக்கு இரண்டு தோசைகளே பரிமாறப்பட்டன. பின் யான் அங்கிருந்த ஒரு மிதிவண்டியை எடுத்துக் கொண்டு விரைவாக எங்கள் வீட்டிற்குப் போய், இரண்டு இட்டலியும் காபியும் சாப்பிட்டுவிட்டு, கவிஞர் புறப்படுவ தற்கு முன்பே விரைவாக வந்து சேர்ந்து விட்டேன். அந்த வயதில் இரண்டு சிறிய தோசைகள் போதவில்லை. 4. ஒரு நாள் மாலை கவிஞரும் யானும் வீட்டு நடு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மாடியிலே இராசாக் கண்ணனாரும் வேறு ஒருவரும் வந்து தங்கியிருந்