பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

6] அவ்விழாவில், செட்டியாரிடம் சிற்சில சமயம் பாடம் கேட்டவர்களும் அரசு ஊழியத்தில் இருப்பவர்களுமாகிய ஐவர், செட்டியாரைப் பாராட்டிக் கவி இயற்றிக் கொண்டு வந்து படித்தனர். இது தக்கதே. ஆனால், பஞ்ச பாண்டவர் போன்ற அந்த ஐவருள் சிலர் செட்டியாரைப் புகழ்ந்ததோடு நில்லாமல், மற்ற புலவர்களை மிகவும் மட்டப் படுத்திப் பாட்டெழுதிப் படித் தனர். ஒருவர், செட்டியாரோடு ஒரு சுற்று வருவா ருண்டோ’ என்று எழுதியிருந்தார். அதாவது, முதல் ரவுண்டிலேயே மற்றவர்கள் வீழ்ந்து விடுவார்களாம். இன்னொருவர் எழுதியதாவது:- தாமரை மலரில் மொய்த்த வண்டு வேறு அருவருப்பான பொருளின் மீது மொய்க்காததுபோல, செட்டியாரிடம் பாடம் கேட்டவர்கள் வேறு யாரிடமும் பாடம் கேட்கமாட்டார் கள் என்று எழுதியிருந்தார்; அவர் என்னிடமும் பாடம் கேட்டுள்ளார். மற்றொருவர் பின்வருமாறு எழுதியிருந் தார் :- தொல்காப்பியப் புலமையில் செட்டியாரை வென்றாரும் இல்லை - வெல்ல இணையாய் நின்றாரும் இல்லை - என எழுதியிருந்தார். இவ்விழா நாளன்று நான் வெளியூர் சென்றிருந்தேன். அதனால், இவையெல் லாம் முதலில் எனக்குத் தெரியா. புதுச்சேரியில் தமிழ் M.A. முதலிய ஐந்து M.A. பட் டங்கள் பெற்றவரும் சட்டப்படிப்பில் M.L. தேர்வுக்குப் படித்தவரும் முதலில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி யாற்றியவரும் பின்னர் இந்திய நாடாளுமன்ற உறுப்பின ராகப் (M.P.) பணி புரிந்தவரும் இறுதியாகப் புதுவை அரசின் வழக்கறிஞராகத் (Public Prosecutor) தொழில்