பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

64 வார்க்கால் பட்டுத் திருமணம் புதுச்சேரிக்காரராகிய பொன் வேங்கடேசன் என்னும் புலவர் நெல்லிக்குப்பத்தில் தமிழாசிரியர் வேலை பார்த் தார். நெல்லிக் குப்பத்திற்கு அண்மையில் உள்ள வார்க் கால்பட்டு என்னும் ஊரில் அவருக்குக் கவிஞர் தலைம்ையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முதல் நாள் மாலை நானும் சிலரும் கவிஞருடன் வார்க்கால் பட்டுக்குப் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. வண்டிக்குள்ளே செலுத்துநர் (கண்டக்டர்) அடிக்கடிக் குழலொலி (விசில் ஒலி) செய் தார். அதிலிருந்து எச்சில் வெளிப்பட்டுப் பலர்மேல் தெளித் தது. அப்போது கவிஞர், வெளியிலும் மழை - உள்ளேயும் மழையா? என்று கிண்டல் பண்ணினார். அனைவரும் சிரித்தனர். மறுநாள் காலை திருமண நிகழ்ச்சி முடிநததும் வாழ்த்துரை தொடங்கப்பட்டது. திருக்குறளார் முனிசாமி, கி. வீரமணி, நான் உட்படப் பலர் வாழ்த்துரை வழங்கி னர். இறுதியாகப் பேசியவர்கள் நானும் திருக்குறளாருமா வோம். திருக்குறளாருக்கு முன் நான் பேசினேன். மண மக்கள் நல்ல பிள்ளைகளைப் பெற்று நீடுழி வாழ்க’ எனக் கூறி என் வாழ்த்துரையை நிறைவு செய்தேன். எனக்கு பின், என் நெருங்கிய நண்பரும் என்பால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவரும் பெரிய அறிஞரு மாகிய திருக்குறளார் பேசுகையில், நகைக்சுவைக்காக, நான் சொன்ன ஒரு கருத்தைத் தொட்டார். அதாவது, நான் மணமக்கள் நல்ல பிள்ளைகளைப் பெற வேண்டும் என்று சொன்னேன் அல்லவா? அதைக் குறிப்பிட்டு, பிறக்