பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

65 கும் போதே எப்படி நல்ல பிள்ளைகளைப் பெறமுடியும்? நல்லதா கெட்டதா என்பது பின்னர்தானே தெரியும்? நல்ல பிள்ளையாகப் பார்த்துக் கருவில் வைக்கமுடியுமா?என்று நட்பு முறையில் என்னைக் கிண்டல் செய்தார். பிறகு கவிஞர் நிறைவுரை ஆற்றியபோது என்னைக் காப்பாற்றி விட்டார். இது தொடர்பாகக் கவிஞர் பேசிய தாவது: 'பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற- - என்னும் குறளில், அறிவறிந்த மக்களைப் பெறுதல் என்று திருவள்ளுவரே கூறியிருக்கிறாரே - அதேபோல் சுந்தர சண்முகமும் நல்ல பிள்ளைகளைப் பெறவேண்டும் என்ப தாகக் கூறினார். மற்றும், மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் என்றும் வள்ளுவனார் மொழிந்துள்ளார். எச் சம் என்றால் பிள்ளை. எனவே, மணமக்கள் மனம் தூய்மையானவராயிருப்பின் நல்ல பிள்ளைகள் பிறக்கும். அதனால், மணமக்கள் நல்லவராயிருக்க வேண்டும்.-என் பதைச் சுந்தரசண்முகம் குறிப்பாகச் சுட்டியுள்ளார்.என்று கவிஞர் கூறி நிலைமையை அமைதியாக நிரவல் செய்தார். முனையிலே முகத்து நில் 1948 அல்லது 1949ஆம் ஆண்டாயிருக்கலாம் என எண்ணுகிறேன். புதுவையில், முன்பு டுப்ளே தெரு’ என்று பெயர் வழங்கப்பட்டதும் இப்போது 'நேருவீதி' என்று பெயர் வழங்கப்படுவது மாகிய சிறப்புறு கடைவீதியின் மையத்தே கெப்ளே தியேட்டர்’ என்னும் ஓர் அரங்கம் – 5