பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70 அடையாளம் கூறல்: ஒரு நாள் கவிஞரும் நானும் தெருக் குறட்டில் இருந்த விசிப் பலகையில் அமர்ந்திருந்தோம். வெளியூரார் இருவர் வந்து, யாரோ ஒருவரது வீடு எங்கே இருக்கிறது என்று விசாரித்தார்கள். யார் வீடு - அவர் என்ன செய்கிறார் - அவர் பெயர் என்ன - என்று எப்படி எப்படியோ கவிஞர் அடையாளம் கேட்டுப் பார்த்தார் அவர்கட்குச்சொல்லத் தெரியவில்லை. பிறகு வீடு எப்படி காட்ட முடியும்? இறுதி யில், கவிஞர் நான்கு வீடுகள் தாண்டி உள்ள ஒரு வீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவரைக் காட்டி, அவர்தான் - அவ ரைப்போய்ப் பாருங்கள் - என்று கூறி அனுப்பி விட்டுப் பெரிதாய்ச் சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட் டேன். அதற்குக் கவிஞர் பின்வருமாறு சொன்னார். நமக்கு அடையாளம் தெரியும்படி அவர்களால் விளக்க முடிய வில்லை; அதனால் அந்த வீட்டுக்காரரைக் காட்டி விட்டால் நாம் பட்ட பாட்டை அவர் படட்டுமே - நாம் எவ்வளவு நேரம் படுவது?-ஒரு வேளை அவரால் சொல்ல முடிந்தாலும் முடியலாம் - என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஊருக்கு உபதேசம்: என்.எஸ். கிருஷ்ணன் ஒரு முறை கவிஞர் வீட்டிற்கு வந்திருந்த பொழுது அவர் தங்கக் கூடத்து அறையைக்கவி ஞர் விட்டிருந்தாராம். அன்று மாலை அந்த அறையை எட்டிப்பார்த்தபோது, கிருஷ்ணன் ஏராளமாக மது அருந் தித் தாறு மாறாகப் படுத்துக்கிடந்தாராம் இதைக் கவிஞர் என்னிடம் கூறியபோது, திரையோவியம் வாயிலாக மது விலக்கு விளம்பரம் செய்த அழகு இதுதான் போலும், என்று எண்ணினேன். ஆனால், தன்னால் இயலாவிடினும்