பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72 ஞர் தம் இறுதிக் காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணே சனின் உதவியைக் கொண்டு பாண்டியன் பரிசு என்னும் திரையோவியம் எடுக்க முயன்றிருக்கிறார். அது கை கூடு முன்பே கவிஞர் சென்னையில் காலமானார். பெருமாள் முதலியார் - கவிஞரின் பெருமைக்கு மேலும் ஒரு சான்று நினை வுக்கு வருகிறது. தமிழகக் கல்வித் துறையில் பெரும் பத விகளை வகித்தவரும் புதுவைக் கல்வித்துறை இயக்குநரா கச் சிறிது காலம் பணியாற்றியவரும் தமிழ் நாடு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநராக இருந்தவரும் தமிழ்ப் பேரறிஞருமான மு.ரா. பெருமாள் முதலியார் என்பவர், புதுவை வழக்கறிஞர் தனராசா அவர்களின் வீட்டுத் திரு மண நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த பொழுது, பாவேந்தர் வீட்டுக்குச்சென்றுபாவேந்தரின்காலில் விழுந்துவணங்கினா ராம். ஆனால் பாவேந்தர், இவ்வாறு காலில் விழுவது சரி யன்று என்று கண்டித்தாராம், துண்டு சிகரெட்: கவிஞர் அடிக்கடிச் சிகரெட் பிடிப்பவர். சிகரெட் பிடித்துக் கொண்டே எழுதினால்தான் கற்பனை ஊற்றெடுக்கும் போலும்! நள்ளிரவிலுங்கூட சிகரெட் பிடித்துக் கொண்டே எழுதுவாராம். சில நாட்களில் நள்ளிரவு நேரத்தில் சிகரெட் தீர்ந்துவிட்டிருக்குமாம். அது இல்லாமல் எழுதுவதற்கு ஓடாதாம்; நிறுத்துவதற்கும் மனம் வராதாம். அதனால், அந்த நள்ளிரவில் பெட்டிக் கடைக்குச் சென்று காவலாக உள்ளே படுத்துறங்கும் பெட்டிக் கடைக்காரரை எழுப்பிச் சிகரெட் வாங்கிக் கொண்டு வந்து எழுதுவாராம்.