பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74 ஆலங் குப்பத்தில்: புலால் உணவு பற்றிய ச்ெய்தி ஒன்று உண்டு. பாவேந்தர் இளமையில் தொட்க்கப் பள்ளி ஆசிரியராக அமர்ந்தார். புதுச்சேரிக்கு வடமேற்கே 16 கி.மீ. தொலை வில் 'ஆலங்குப்பம் என்னும் சிற்றுர் உள்ளது. அது பிரஞ்சிந்தியாவைச் சேர்ந்த பகுதியாயிருந்தது. அங்கே ஈராசிரியர் பள்ளி தொடங்கப் பெற்றது. பாவேந்த்ரும் மற்றொருவரும் அப்பள்ளியின் ஆசிரியராகச் சென்று பணி யாற்றினர். . ஆலங்குப்பம் ஒரு சிற்றுார். அங்கே உணவுக் கடை கிடையாது. ஆசிரியர்கள் காலையில் சென்று மாலைநக ருக்குத் திரும்புவர். மதிய் உணவுக்கு ೯TTST செய்வது? காலையிலேயே உடன் எடுத்துச் செல்லலாம். ஆனால் அது தேவைப்படவில்லை. அவ்வூரில் செல்வரும் வள்ள்லு மான ஒரு நாயுடு குடும்பம் உள்ளது. நாயுடு அவர்கள் இரண்டு ஆசிரியர்களையும் மதியத்தில் தங்கள் வீட்டில் உணவு கொள்ளச் செய்துவிட்டார். தொடக்கத்தில், நாயுடு கவிஞரல்லாத மற்றோர் ஆசிரியரை நோக்கி, 'நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள்? - உங்களுக்கு எது பிடிக் கும்? - என்று கேட்டாராம். அதற்கு அந்த ஆசிரியர், நான் மரக்கறி உணவைத் தவிர வேறு எதுவும். சாப்பிட மாட்டேன்' என்றாராம். பின்னர் நாயுடு கவிஞரையும் அவ்வாறு வினவினாராம். அதற்குக் கவிஞர், நான் மாமிச - உணவைத் தவிர வேறு எதுவும் சாப்பிடமாட்டேன்' என். றாராம். நாயுடு சிரித்தாராம். இது, கவிஞரே என்னிடம் நேரில் சொன்ன செய்தியாகும்,