பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

2 முதல் அறிமுகம் தஞ்சையை அடுத்த திருவையாற்றில் உள்ள அரசர் கல்லூரியில் யான் தமிழ் வித்துவான் பட்டப் படிப்பு படித்தேன். படிப்பு நான்கு ஆண்டு; நான் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அகவை பதினாறு; ஆண்டு 1938. கட்டடம் மூன்றடுக்கு அரண்மனை, சரபோசி மன்னர் கட்டியது. மேல் இரண்டுமாடிகளில் வகுப்புகள் நடை பெறும். கீழ்க்கட்டு மாணாக்கர் விடுதி. ஒரு நாள் காலை விடுதியில் என் அறையில் யான் படித்துக்கொண்டிருந்த போது, பாரதி தாசன் பாட்டு-பாரதி தாசன் பாட்டு’ என்ற ஒலி வெளியிலே கேட்டது. விடுதிக்கு நாளேடுகளும் திங்கள் ஏடுகளும் வரும், அவற்றுள் ஒன்று பெரியாரின் விடுதலை’ என்னும் நாளேடு. அந்த ஏட்டில் அன்றைக்குப் பாரதிதாசனின் இந்தி எதிர்ப் புப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அந்தப் பாடல்களைச் சில மாணாக்கர்கள் படித்துவிட்டு, பலர்க்கும் தெரியும்படி