பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78 நாம் ஏழு துணி போட்டுவிட்டு எழுதி வைக்கிறோம் - மறந்து விடாமல் இருப்பதற்காக, என்று வேடிக்கையாக ஒருமுறை கூறினார். இவ்வாறு நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் பேசவும் வல்லவர் கவிஞர். அழியாத பத்தினி பாவேந்தரோடு பழகி நேரில் கண்டும் கேட்டும். அறிந்த சுவையான செய்திகளுள் இன்னும் ஒன்று அறி விப்பேன். பாவேந்தரின் அன்பர்களுள் ஒருவர் இரா.மு என்பவர். இவர் புதுவை அரவிந்தர் ஆசிரம அச்சகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். இவர் ஒரு நாள் சுவையான செய்தி ஒன்றைக் கவிஞரிடம் கூறினார். நானும் உடனி ருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். செய்தியாவது: அரவிந்தர் ஆசிரம அச்சகத்தில் வட நாட்டிளர் பலரும் புதுச் சேரிக்காரர்கள் சிலரும் பணி புரிகின்றனர். புதுச் சேரிக்காரர் ஒருவர் தம் திருமணத்திற்காக விடுமுறை எடுத்தாராம். அவருக்கு அடுத்தாற்போல் அமர்ந்து பணி புரியும் வடநாட்டு மங்கை யொருத்தி, அவரை நோக்கி, நீ ஏன் விடுமுறை எடுக்கிறாய்? என்று கேட்டாளாம். எனக்குத் திருமணம் - அதற்காக எடுக்கிறேன் என்றா ராம். சென்ற ஆண்டும் உனக்குத் திருமணம் என்று விடு முறை எடுத்தாய் - இப்போதும் எடுக்கிறாயே - ஏன் உன் மனைவி இறந்து விட்டாளா? அல்லது இருவரும் மண் விலக்கு செய்து கொண்டீர்களா? எது உண்மை? என்று வினவினாளாம். அதற்கு அவர், சென்ற ஆண்டு எனக்குத் திருமணம் நடைபெற வில்லை; என் அண்ண னுக்குத்தான் சென்ற ஆண்டு திருமணம் நடந்தது; இப்போது எனக்குத் திருமணம் நடக்கப் போகிறது என் றாராம். அதற்கு அப்பெண் மிகவும் வியந்து, 'இது என்ன