பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

79 கொடுமை! உன் அண்ணனுக்குத் திருமணம் என்றால், அது உனக்கும் திருமணம் இல்லையா? எவ்வளவு குறுகிய மனப் பான்மை! உங்களுக்குள் ஒற்றுமை இல்லை. இரு வரும் ஒரே பெண்ணை மனைவியாக வைத்துக் கொள் ளாமல் ஆளுக்கு ஒரு பெண் தேடிக் கொள்கிறீர்களே இது சரியா?’ என்று கூறினாளாம். இந்தச் செய்தியை இராமு சொல்லச் சொல்ல நாங் கள் மிகவும் வியந்து நகைத்தோம். வேறொன்றும் இல்லை. ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினியாய்த் துரோ பதை இருந்தாள் அல்லவா? அதே நாகரிகம் இது, இடத் துக்கு இடம் பழக்கம் வேறு. இது தொடர்பாகச் சிங்கப் பூர்ச் செய்தி யொன்றைத் தாம் கேள்விப்பட்டிருப்பதாகக் கவிஞர் கூறினார். அதாவது: மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இருக்கும் வட இந்தி யர்களுள் சிலர் திடீரென இனிப்பு வழங்குவார்களாம். என்ன சிறப்பு (விசேடம்) என்று கேட்டால், இந்தியாவில் எங்கள் ஊரில் எனக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்வாராம். நீ இந்தியாவிலிருந்து இங்கு வந்து இரண்டு மூன்றாண்டுகாலம் ஆகிறதே! உனக்கு எப்படி இந்தியா வில் குழந்தை பிறந்திருக்க முடியும்? நடுவில் உன் மனைவி யும் இங்கு வந்து போகவில்லையே என்று வினவின், அதற்கு அன்னார் சொல்லும் பதில், இந்தியாவில் எங்கள் ஊரில் என் அண்ணன் இருக்கிறார் - என் தம்பி இருக்கி றான் - என்பதுதான். எனவே, இதுவும் "ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினி கதை போன்றதுதான்! துவைக்கும் கல் எங்கே? நான் ஒரு நாள் பிற்பகல் கவிஞர் வீட்டிற்குச் சென் றிருந்தேன். அப்போது அங்கே, சேலம் மாவட்டம் இராசி