பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

8 துருவாச முனிவர் நன்றாகப் பாருங்கள்: வெயூரிலிருந்து வருபவர்கட்ரு விருந்தோம்பி இவ் வளவு பரிவு காட்டும் பாவேந்தர், சிலநேரம், வெளி யூரார் சிலரிடத்தில் துருவாசரைப் போல் சீற்றம் கொள்ள வும் தயங்குவதில்லை. ஒரு நாள். காலை நான் பாவேந்தரைக் காண்பதற் காக அவர் வீடு இருக்கும் பெருமாள் கோயில் தெரு வழியே சென்று கொண்டிருந்தேன். உள்ளுர் ஆசிரியர் வட மலை என்பவர் இருவருடன் எதிரே வந்தார். நானும் வடமலையும் ஒருவருக் கொருவர் நலம் விசாரித்துக் கொண்ட பின்னர், அவருடன் இருந்த இருவரைக் காட்டி இவர்கள் யார் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன விவரமாவது: