பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

85 யிடையே, ‘என்ன-கண்டுபிடித்தீர்களா', 'என்ன-சொல்வது தெரிகிறதா', 'என்ன-சொல்கிறது புரிகிறதா என்றெல் லாம் தேவையில்லாமல் அசைச் சொற்களைப் போலச் சில - சொற்களைக் கூறுவதுண்டு. அவ்வாறே கவிஞரிடம் பேசிக் கொண்டிருந்தவரும், இடையிடையே, புரிகிறதா-என்ன புரிந்ததா-என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். - கவிஞருக்கு மீசை துடித்தது; கண்கள் சுழன்றன; புரு வங்கள் நெற்றிமேல் ஏறி இறங்கின; எழுந்து நின்றார். ‘என்னய்யா எனக்குத் தெரியாததைச் சொல்லி விட்டாய்புரிகிறதா-புரிகிறதா என்று கேட்கிறாய்; என்னவோ என் னால் புரிந்து கொள்ள முடியாததைச் சொல்லி விட்ட தைப் போலப் புரிந்ததா-புரிந்ததா என்று கேட்கிறாயேஎன்று உரத்த குரலில் கூவினார். வந்தவர் உடனே பத மாக நழுவி விட்டார். வைக்கோல் விலை ஒரு நாள் தெருவில் வைக்கோல் வண்டி போயிற்று. கவிஞர், வைக்கோல் கட்டு என்ன விலை என்று கேட்டார். வண்டிக்காரர் ஒரு விலை கூறினார். கவிஞர் சிறிது குறைத் துக் கேட்டார். அதற்கு வண்டிக்காரர், நல்ல விலை கேட் கிறாய்-இந்த விலை வைக்கோலுக்கு மட்டுமா? அல்லது, என் வண்டி-மாடுகளுடன் எனக்கும் சேர்த்துமா இந்த விலை என்று நையாண்டி செய்தார். கவிஞரின் இயல்பை வண்டிக்காரர் அறியார். உடனே கவிஞர், இந்த விலை, உன் வண்டி மாடுகளுடன் உனக்கு மட்டுமல்ல-உன் குடும் பத்தாருக்கும் சேர்த்து-என்றார்.