பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

86 கோழிக் கூண்டு ஒரு நாள் கவிஞர் தெருத் திண்ணையில் மரப் [_1 © 6ö & அடைத்துக் கொண்டிருந்தார். தெருவில் போன நண்பர் ஒருவர் புறாக் கூண்டா என்றார். இல்லை, கோழிக்கூண்டு என்றார் கவிஞர். நண்பர் கோழி வளர்ப்பதைச் சுட்டிக் கவிஞர் அவ்வாறு கூறினார். இவ்வாறு கவிஞரிடம் வம்புக்கு வந்து வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள் பலர். வாழைக்காய்த் திருடர் கவிஞ்ர் புதுவை-முத்தியால்பேட்டை அரசினர் பள்ளி யில் பணியாற்றிக் கொண்டிருந்த போழ்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர்க்கும் இவருக்கும் அடிக்கடி மோதல் ஏற் படுமாம். ஒய்வு நேரத்தில் கவிஞர் பாடல்கள் எழுதுவ துண்டு. தலைமையாசிரியர் இதை வைத்துக் கவிஞரைத் தொலைத்துக்கட்ட எண்ணினாராம். சுப்புரத்தினம் பாடமே நடத்துவதில்லை; அவர்து சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்; எனக்கு எதிர்ப்பாக மற்ற ஆசிரியர்களையும் அணி சேர்க்கிறார்-என்று தலைமை யாசிரியர் மேல் அலுவலர்க்கு எழுதி விசாரிக்க ஏற்பாடு செய்தாராம்; மற்றும் பல வகையிலும் தொல்லை தந்து வந்தாராம். பின்னர் மேல் அலுவலர் பள்ளிக்கூடம் வந்து, கவிஞரை யும் தலைமை ஆசிரியரையும் எதிர் எதிரே வைத்துக் கொண்டு விசாரித்தாராம். இல்லாததும் பொல்லாதது மாகத் தலைமையாசிரியர் பல குற்றங்கள் சுமத்தினாராம். பின் மேலாளர், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?-என்று கவிஞரைக் கேட்டாராம். கவிஞர் ஆயத்தமாகப் படைக் கலம் ஒன்று வைத்திருந்தாராம். அதாவது, பள்ளிக் கூடத்