பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

88 வாழ்க வாழ்கவே' என்ற பாடல் போடப்ப்ட்டிருக்கிறது. அந்தப் பாடலும் புதுவையில் கற்றுப் பாடப்படுகிறது. பிரெஞ்சுக்காரரின் ஆட்சியில் ஆங்கில மன்னரைப் புகழ்ந்து பாடும் புத்தகம் கூடாது என்று நான் சொல்லி வருகிறேன். இது பொறுக்காமல் என்னைத் தொலைக்க முயல்கிறார் கள்-என்பது கவிஞர் சொன்னது. பின்னர் ஆளுநர் கவிஞ ரைக் காப்பாற்றி விட்டாராம். இதுவும் கவிஞர் என்னிடம் நேரில் சொன்னது. - நீதித்துறை மோதல் நீதி மன்றத்தில் நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர், நீ பெரிய பண்டிட் என்று நினைத்துக் கொண்டு இவ்வாறு பேசுகிாறயா-என்று கேட்டாராம். அவருக்குக் கவிஞர் அளித்த பதிலாவது:-"நான் தான் பெரிய பண்டிட்-நீங்கள் முட்டாள் என்று நான் சொல்லவில்லையே-என்பது. இது வும் கவிஞர் என்னிடம் நேரில் சொன்ன செய்தி. இவ்வாறு வாழ்நாள் முழுதும் கவிஞர் எதிர் நீச்சல் அடித்தே வாழ்ந்து வந்திருக்கிறார். இத்தகையோர் உள்ளங்களில்தான் தக்க புரட்சி மலரும். . இல்லை என்பான் யாரடா: கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் கடவுள் பாடல்கள் மிகப் பல எழுதியுள்ளார்கள். அவற்றுள் ஒன்று, . 'இல்லை என்பான் யாரடா-என் அப்பனைத் தில்லையிலே சென்று பாரடா என்று தொடங்கும் பாடலாகும். இப்பாடல் இசைத் தட்டில் இடம் பெற்றுப் பல் இடங்களிலும் பாடப்பட்டு